தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் விஜய் ரசிகர்களை பெரிய அளவில் ஏமாற்றம் அடையச் செய்தது. விஜய் போன்ற ஒரு மிகப்பெரிய நடிகரை படம் முழுவதும் ஒரு மாலில் நடப்பது போன்ற கதைக்குள் பொருத்தியது தவறு என்பது போன்ற விமர்சனங்களும் எழுந்தன.
இந்த நிலையில் இந்த படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த மலையாள வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ என்பவர் சில தினங்களுக்கு முன்பு மலையாள சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில் பீஸ்ட் படம் தன்னை ரொம்பவே ஏமாற்றி விட்டது என்றும் படத்தில் தன்னை சரியாக பயன்படுத்தவில்லை என்றும், பல காட்சிகளில் அவர்கள் லாஜிக்காக கோட்டை விட்டு விட்டனர், அதனால்தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அந்தப்படம் தவறிவிட்டது என்பது போன்றும் கிண்டலாக கூறியிருந்தார்.
இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரளாவில் இருக்கும் விஜய் ரசிகர்களையும் கோபமடையச் செய்தது. இதைத்தொடர்ந்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்துள்ள ஷைன் டாம் சாக்கோ, “நான் அவ்வாறு கூறியது தவறு தான் என்பதை இப்போது உணர்கிறேன். அதற்காக நான் வருத்தப்படுகிறேன். காரணம் நாம் எதைப் பற்றியோ அல்லது யாரைப் பற்றியோ மோசமாக பேசும்போது அது அவர்களை அளவில்லாமல் நேசிக்கும் பலரையும் காயப்படுத்தும் என்பதை நான் இப்போது உணர்ந்துள்ளேன். அப்படி பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் நண்பா” என்று கூறியுள்ளார்.