பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை | 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் | இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி | தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து | வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று |
கன்னடத்தில் துருவ் சார்ஜா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள கேடி - தி டெவில் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடந்தபோது அதில் பேசிய சஞ்சய் தத், “லியோ படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எனக்கு ஒரு பெரிய கதாபாத்திரம் தரவில்லை என்கிற கோபம் அவர் மீது உண்டு. அவர் என்னை வீணாக்கி விட்டார்” என்று பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் பேசும்போது, “மீடியாவில் இப்படி செய்தி பரவியதும் உடனடியாக சஞ்சய் தத் என்னை தொடர்பு கொண்டார். நான் ஜாலியான முறையில் ஒரு விஷயத்தை சொன்னேன். ஆனால் அதை வெட்டி ரொம்பவே மோசமான ஒரு விஷயமாக மாற்றி விட்டார்கள். நான் அந்த மாதிரி அர்த்தத்தில் சொல்லவில்லை லோகேஷ் என்று என்னிடம் கூறினார்.
நான் ஒன்றும் இந்த உலகத்தில் மிகப்பெரிய அறிவாளியோ அல்லது மிகச்சிறந்த இயக்குனரோ இல்லை. நானும் சில தவறுகள் என்னுடைய படங்களில் செய்து இருக்கிறேன். அதில் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். சஞ்சய் தத் சாரை வைத்து ஒரு மிகச்சிறந்த படம் ஒன்றை நிச்சயம் செய்வேன்” என்று கூறியுள்ளார்.