2025 வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... | மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? |

லீனா மணிமேகலை இயக்கியுள்ள காளி என்கிற ஆவணப்படத்தின் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம், அந்த போஸ்டரில் காளி வேடம் போட்டிருந்த பெண் ஒரு கையில் ஓரினச்சேர்க்கையாளரின் கொடியும், மற்றொரு கையில் சிகரெட்டும் பிடித்தபடி போஸ் கொடுத்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த போஸ்டர் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இருப்பதாக கூறி அவரை கைது செய்ய வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்தார்கள். ஆனால் அதையடுத்து எந்த மிரட்டலுக்கும் நான் பயப்பட மாட்டேன் என்று பதில் கொடுத்த லீனா மணிமேகலை, சிவன் - பார்வதி வேடமணிந்த இருவர் புகை பிடிக்கும் போட்டோவை மீண்டும் வெளியிட்டு இன்னொரு அதிர்ச்சியை கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் அவர் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஹிந்து கடவுளை இழிவுபடுத்தியதற்காக லீனா மணிமேகலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் வாதாடினார்கள். இதையடுத்து லீனா மணிமேகலை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிபதி சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.