மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
தமிழ் சினிமா உலகின் மூத்த நடிகரான கமல்ஹாசன் கடந்த பல வருடங்களாகவே ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற பட நிறுவனத்தைத் தயாரித்து வருகிறார். அந்த நிறுவனம் மூலம் தான் நடிக்கும் படங்களை மட்டுமல்லாமல் மற்ற நடிகர்கள் நடிக்கும் படங்களையும் தயாரித்துள்ளார்.
அவருடைய தயாரிப்பில் இதற்கு முன்பு மற்ற நடிகர்களில் சத்யராஜ் நடித்த 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு', மாதவன் நடித்த 'நள தமயந்தி', விக்ரம் நடித்த 'கடாரம் கொண்டான்' ஆகிய படங்கள் மட்டுமே தயாராகியுள்ளன. தற்போது அவரது நிறுவனம் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நடிக்க உள்ள படங்களைத் தயாரிக்க உள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
அடுத்து ரஜினிகாந்த், விஜய் நடிக்க உள்ள படங்களையும் தயாரிக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது. 'விக்ரம்' படம் மூலம் கிடைத்த மகா லாபத்தை மீண்டும் சினிமா தயாரிப்பில் முதலீடு செய்யும் முடிவில் இருக்கிறாராம் கமல்ஹாசன். ரஜினி, விஜய் படங்கள் பற்றிய பேச்சு வார்த்தை முடிவடைந்த பின் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் என்கிறார்கள்.