தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகையாக இருந்தவர் நமீதா. கிளாமர், கவர்ச்சி கலந்த கதாநாயகியாக வலம் வந்தவர். அவருக்கும் வீரேந்திரா என்பவருக்கும் கடந்த 2017ம் வருடம் திருமணம் நடைபெற்றது. கடந்த மே மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக 'பிரக்னன்சி போட்டோ ஷுட்' புகைப்படங்களை வெளியிட்டு நமீதா அறிவித்திருந்தார்.
தற்போது தனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக கணவருடன் சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இருவரும் ஆளுக்கு ஒரு குழந்தையை கையில் ஏந்திக் கொண்டு அந்த வீடியோவில் பேசியுள்ளனர். “இந்த கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் எங்களது இந்த மகிழ்ச்சி செய்தியைப் பகிர மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். எங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. உங்கள் அன்பும், வாழ்த்துகளும் எங்களுக்கு எப்போதும் போல் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்,” என அந்த வீடியோவில் பேசியுள்ளார்கள்.
நமீதா, வீரா தம்பதியருக்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
நமீதாவிற்கு குழந்தைகள் பிறந்து சில நாட்களுக்கு மேலாகிவிட்டது. குழந்தைகள் சற்று வீக்காக இருந்ததால் நோய் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை, அதனால் யாரிடமும் சொல்லவில்லை. இப்போது குழந்தைகள் நலமானதும் இஷ்கான் கோயிலுக்கு சென்று கணவர், குழந்தைகளுடன் நமீதா வழிபட்டார். அதன் பிறகே இந்த தகவலை வெளியானது.