துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'சோழா சோழா' என்ற பாடலின் வெளியீட்டு விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குனர் மணிரத்னம், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, நாசர், பிரகாஷ்ராஜ், தணிகலபரணி, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு, நடிகை சுஹாசினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய மணிரத்னம், தெலுங்குத் திரையுலகின் சீனியர் நடிகரான சிரஞ்சீவிக்கு நன்றி என்று பேசினார். மேலும் அது பற்றி பேசவில்லை. அதனால், நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு இந்த 'பொன்னியின் செல்வன்' படத்தில் சிரஞ்சீவி எந்த விதத்தில் தொடர்பாகி உள்ளார் என்று யோசித்தனர். படத்தில் அறிமுகக் காட்சியில் பின்னணிக் குரல் மூலம் கதையை ஆரம்பிக்கிறார்களாம். அதற்காக தமிழில் கமல்ஹாசன் குரல் கொடுத்துள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவி குரல் கொடுத்துள்ளார். எனவேதான் மணிரத்னம், சிரஞ்சீவிக்கு நன்றி சொன்னதாகத் தெரிகிறது.
மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இது போன்று சீனியர் நடிகர்களைத்தான் பேச வைத்துள்ளார்களாம். விரைவில் அது பற்றிய தகவல் வெளியாகலாம்.