மூத்த நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
'காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420' போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் மேக்னா ராஜ். கடந்த 2018ல் கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை திருமணம் செய்து கொண்டார். 2020ல் மாரடைப்பால் திடீரென காலமானார் சிரஞ்சீவி. அந்த சமயத்தில் கர்ப்பமாக இருந்த மேக்னாவிற்கு கணவரின் இழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. சில மாதங்களில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. கணவர் இழப்பிலிருந்து மெல்ல மீண்டு வரும் மேக்னா படங்களிலும் நடிக்கிறார். இந்நிலையில் இவரை மறு திருமணம் செய்ய சொல்லி சிலர் கூறி வருகின்றனர்.
இதுபற்றி மேக்னா கூறுகையில், ‛‛ஒரு கூட்டம் என்னை 2வது திருமணம் செய்ய சொல்கிறது. சிலர் உங்கள் குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருங்கள் என்கின்றனர். நான் எதை கேட்பது. பலரும் பல விதமான ஆலோசனைகளை சொல்வார்கள். முடிவு நீ தான் எடுக்க வேண்டும் என எப்போதும் எனது கணவர் கூறுவார். அவர் கூறியபடி இப்போதைக்கு நான் எனது குழந்தையை வளர்ப்பது மற்றும் அவன் எதிர்காலம் பற்றி மட்டும் சிந்திக்கிறேன். வேறு எந்த எண்ணமும் இல்லை'' என்கிறார்.