தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழ் சினிமாவில் துணிச்சலான நடிகைகளில் ஒருவர் ஆண்ட்ரியா. வட சென்னை படத்தில் அரை நிர்வாணமாக நடித்தார். பிசாசு 2 படத்தில் நிர்வாணமாக நடித்துள்ளார். இதுதவிர தரமணி, பச்சைக்கிளி முத்துச்சரம், விஸ்வரூபம், துப்பறிவாளன் படங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
ஆங்கிலோ இந்திய பெண்ணான ஆண்ட்ரியாவின் குடும்பம் பெல்ஜியத்தில் வசித்து வருகிறது. ஆண்ட்ரியா மட்டும் சென்னையிலேயே தங்கி இருந்து படிப்பு, நடிப்பு, மாடலிங், தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் ஆண்ட்ரியாவின் தங்கை நாடியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்ட்டது. நாடியா தன்னுடன் பணியாற்றிய பெல்ஜியத்தை சேர்ந்த செட்ரிக் என்பவரை காதலித்து வந்தார். அவரையே கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணத்திற்காக பல வருடங்களுக்கு பிறகு பெல்ஜியம் சென்ற ஆண்ட்ரியா தங்கையின் திருமணத்தில் கலந்து கொண்டதோடு பெற்றோருடன் சில நாட்கள் தங்கி இருக்க முடிவு செய்து அங்கேயே இருக்கிறார்.
இதுகுறித்து ஆண்ட்ரியா கூறும்போது “நமக்கு நெருக்கமான உள்ளங்கள் உலகில் மிகவும் குறைவு. அப்படியான அன்பானவர்களை சேர்ந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த சந்தோஷத்தை எனது குடும்பம் தற்போது அனுபவித்து வருகிறது. நீண்ட காலத்திற்கு பிறகு எனது குடும்பத்தோடு நேரம் செலவு செய்யும்போது என்னை நானே மறந்து போகிறேன். ஒரு பறவை போல பறந்து கொண்டிருக்கிறேன்” என்கிறார்.