திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
ஒரு மிகப்பெரிய வெற்றி எல்லாவற்றையும் மாற்றிவிடும் என்று சொல்வதுண்டு. அதற்கு சமீபத்திய உதாரணம் விக்ரம் படம் தான். கமலின் மார்க்கெட் இனி அவ்வளவுதான் என பலரும் நினைத்த நேரத்தில் விக்ரம் படத்திற்கு கிடைத்த வெற்றியும் அந்த படத்தின் மாபெரும் வசூலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தியன்-2 படத்தை உடனடியாக மீண்டும் துவங்க வைத்திருக்கிறது..
அதேபோலத்தான் கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் படம் படப்பிடிப்பு முடிந்தும் சில காரணங்களால் போஸ்ட் புரொடக்சன் பணிகள் பாதியிலேயே நிற்கின்றன. விக்ரமின் கடந்த சில படங்கள் சரியாக ஓடாததும் அதற்கு காரணம்.
இந்த நிலையில் விக்ரம் நடிப்பில் இந்த மாத இறுதியில் கோப்ரா திரைப்படம் வெளியாக இருக்கிறது. செப்டம்பர் 30 பொன்னியன் செல்வன் படம் வெளியாக இருக்கிறது. இந்த இரண்டு படங்களின் ரிலீஸை ஒட்டி, விக்ரம் தற்போது பரபரப்பாக புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்த இரண்டு படங்களில் இரண்டுமே ஓடினாலும் அல்லது ஏதோ ஒன்று வெற்றி பெற்றாலும் கூட விக்ரமுக்கு அது லாபம் தான். அதனை பயன்படுத்தி துருவ நட்சத்திரம் படத்தையும் சூட்டோடு சூட்டாக வெளியிட்டு விடலாம் என தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. வரும் டிசம்பரில் படத்தை வெளியிடவும் தீர்மானித்து உள்ளார்களாம்.
அதுமட்டுமல்ல கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. அந்த படமும் வெற்றி பெறும் பட்சத்தில் கவுதம் மேனன் இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் படத்திற்கும் ரசிகர்களிடமும் விநியோகஸ்தர்களிடமும் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி விடும் என்பதால் அதன் பலனை துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட்டு அறுவடை செய்து கொள்ளலாம் எனவும் முடிவு செய்துள்ளார்களாம்.