வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

தமிழில் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக திரைப்படமாக உருவாகி உள்ளது. இதன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் முக்கியமான பெண் கதாபாத்திரங்களான நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யாராயும், குந்தவை கதாபாத்திரத்தில் திரிஷாவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது இதுதான் முதல்முறை. புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் த்ரிஷா எப்போதுமே ஐஸ்வர்யா ராய் பற்றி சிலாகித்தே பேசி வருகிறார்.
அதேசமயம் படப்பிடிப்பு தளத்தில் இருந்து இதுநாள்வரை இவர்கள் ஒன்றாக பணியாற்றிய புகைப்படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் நந்தினியும் குந்தவையும் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்துவிட்டு ரசிகர்கள் சிலர் சோழர்காலத்தின் செல்பி ராணிகள் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்