தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடிப்பில் இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'.
கல்கி எழுதி மாபெரும் வரவேற்பைப் பெற்ற சரித்திர நாவலான 'பொன்னியின் செல்வன்'ஐ திரைப்படமாக, எம்ஜிஆர் எடுப்பதாக இருந்து பின்னர் கமல்ஹாசன் முயற்சித்து அதுவும் நடக்காமல் போக கடைசியில் லைக்கா சுபாஷ்கரன், மணிரத்னம் ஆகியோர் எடுத்து முடித்தார்கள்.
இரண்டு பாகங்களாகத் தயாரான படத்தின் முதல் பாகம் 2022ல் வெளிவந்து நல்ல வரவேற்பையும், இரண்டாம் பாகம் 2023ல் வெளிவந்து சுமாரான வரவேற்பையும் பெற்றது.
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணி முதன் முதலில் இணைந்த படம் 'நாயகன்'. 1987ல் வெளிவந்த அத்திரைப்படம் தமிழ் சினிமாவில் இன்று வரையும் பேசப்படும் ஒரு பொக்கிஷத் திரைப்படம். 38 வருடங்களுக்குப் பிறகு கமல், மணிரத்னம் கூட்டணி மீண்டும் 'தக் லைப்' படத்தில் இணைந்துள்ளது.
ஜுன் 5ல் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியானதைத் தொடர்ந்து சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இத்தனை வருடங்களாக நீங்கள் இருவரும் இணைய இவ்வளவு இடைவெளி ஏன் விட்டீர்கள். நடுவில் எந்த முயற்சியும் எடுக்கவில்லையா என கமல்ஹாசனிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு கமல்ஹாசன், “ஒரு படத்திற்கான முழு ஸ்கிரிப்ட்டை எடுத்துக் கொண்டு வந்தார். அதுதான் 'பொன்னியின் செல்வன்'. அவர் சொன்ன பட்ஜெட்டைப் பார்த்து என்னால் தாங்க முடியாது என்று சொல்லி மறுத்துவிட்டேன்,” என அப்படத்தைத் தயாரிக்க முடியாதது பற்றி சொன்னார்.
'நாயகன்' படம் வெளிவந்த 1987ம் ஆண்டிற்குப் பிறகே அவர்கள் 'பொன்னியின் செல்வன்' படமாக்குவதைப் பற்றி விவாதித்துள்ளார்கள். அப்போதே நடந்திருந்தால் இப்போது வந்த 'பொன்னியின் செல்வன்' படத்தை விடவும் பிரமாதமாக வந்திருக்க வாய்ப்புள்ளது.