செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
'பாகுபலி' படத்தின் மூலம் பான் இந்தியா நடிகர் எனப் பெயரெடுத்தவர் தெலுங்கு நடிகரான பிரபாஸ். அதற்குப் பிறகு அவர் நடித்த 'சாஹோ, ராதே ஷ்யாம்' படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இருந்தாலும், அவருக்கு பிரம்மாண்டமான படங்களில் நடிக்கும் வாய்ப்பு தொடர்ந்து கிடைத்தது.
தற்போது 'ஆதி புருஷ், சலார், புராஜக்ட் கே' ஆகிய பிரம்மாண்ட பான் இந்தியா படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் 'ஆதி புருஷ்' படம் ராமாயணக் கதையாக உருவாகி வருகிறது. ஓம் ராவத் இயக்கும் இப்படத்தில் ராமர் ஆக பிரபாஸ், சீதை ஆக கிரித்தி சனோன், ராவணனாக சைப் அலிகான் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் முதல் டீசர் வரும் அக்டோபர் 2ம் தேதியன்று ராமர் பிறந்த இடமான அயோத்தியில் வெளியிடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 2023 ஜனவரி 12ம் தேதி இப்படம் வெளியாகிறது.