ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கன்னட சினிமாவின் முன்னணி இயக்குனரான பிரசாந்த் ராஜ் இயக்கும் தமிழ் படம் கிக். இதில் சந்தானம், தான்யா ஹோப், தம்பி ராமையா, பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, ஒய்.ஜி.மகேந்திரா, மொட்டை ராஜேந்திரன், ஷகிலா, ராகிணி திவேதி, வையாபுரி, சிசர் மனோகர், கிங்காங், முத்துக்காளை, சேஷு, கூல் சுரேஷ், அந்தோணி உள்பட பலர் நடிக்கிறார்கள். சுதாகர் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், அர்ஜூன் ஜன்யா இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் பிரசாந்த் ராஜ் கூறியதாவது: கன்னடத்தில் ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும் அதன் வெற்றியை பார்த்துட்டு என்னை தமிழில் படம் பண்ண கூப்பிடுவாங்க. தமிழில் அறிமுகமாகிற முதல் படம் பெருசா, மாஸா இருக்கணும்னு காத்துகிட்டு இருந்தேன்.
எனக்கு காமெடி படங்கள் ரொம்பவும் பிடிக்கும். நான் எடுத்த பத்து படங்களிலும் காதலும், காமெடியும் அதிகமாக இருக்கும். வாழ்க்கை நமக்கு பல கஷ்டங்களை கொடுத்துட்டே இருக்கும். நம்மை அதிலிருந்து விடுவிக்கிறது காமெடி தான். இன்னிக்கும் பாருங்க, சார்லி சாப்ளினுக்கு இணையாக ஒருத்தரை கண்டுபிடிக்கவே முடியலை. வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் நகைச்சுவையோடு பார்க்க ஆரம்பிச்சிட்டால் நாம் எல்லோரும் தப்பிச்சிடலாம்னு தோணும். நமக்கு இருக்கிற கஷ்டம், துக்கம், வறுமை, ஏழ்மை, சோகம்னு எல்லா துயரத்தையும் மறந்து சிரிச்சு, சந்தோஷமா பொழுது போகணும்.. அப்படி நினைத்து வந்தது தான் இந்த 'கிக்' படம். இந்த படத்தை பொறுத்தவரை கிக் என்றால் போதை அல்ல காமெடி.
விளம்பர நிறுவனத்தில் பணிபுரிகிற சந்தானம் எப்படியாவது கொஞ்சம் குறுக்கு வழியில் கூட போய் வெற்றியை அடைய துடிக்கிறவர். ஹீரோயின் தான்யா ஹோப், நேர்மையாய் விளம்பரத் துறையில் முன்னேற துடிக்கிற கேரக்டரில் நடித்திருக்கிறார். இரண்டு பேரும் எலியும் பூனையுமாக மோதி கொள்வது தான் கதை. சந்தானத்தை எதற்காக விரும்பி பார்க்க வருவார்களோ அதற்கான எல்லா வேலைகளையும் செய்து வைத்திருக்கோம்.
சந்தானத்துக்கு கூட நடிக்கிறவங்க ஸ்ட்ராங்கா இருக்கணும். அவர் அடிக்கிற பஞ்ச் ஒவ்வொண்ணையும் சமாளிக்கிற நல்ல பக்குவமான நடிகர்கள் இருந்தால் காமெடி அள்ளும். அவருடன் நடிக்காமல் இருந்தவர்களையெல்லாம் இதில் கொண்டு வந்தேன். செலவை பற்றி கவலையே படாமல் எது இருந்தால் நல்லா இருக்குமோ அதற்கான வேலை செய்திருக்கேன். இங்கே ஒரு நல்ல இடத்தையும் பிடிக்கணும், முத்திரை பதிக்கணும் அதுதான் ஆசை.