துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
நடிகர் சிவாஜி கணேசனின் 95வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு சார்பில், சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கும், உருவ படத்திற்கும் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் துரை முருகன், வேலு உள்ளிட்ட அமைச்சர்களும், ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட சிவாஜி குடும்பத்தினரும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் சங்க வளாகத்திலும் சிவாஜிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அவரது உருவ படத்திற்கு நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், பொருளாளர் கார்த்தி மற்றும் நிர்வாகிகள் ராஜேஷ், அஜய் ரத்தினம், எம்ஏ.பிரகாஷ் மற்றும் நடிகர் சங்க மேலாளர் தாமராஜ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள்.