துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
'புஷ்பா' படத்திற்குப் பிறகு இந்திய அளவில் பாப்புலர் நடிகையாக மாறியவர் ராஷ்மிகா மந்தனா. விஜய் ஜோடியாக 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படம் வெளிவந்த பின் தமிழிலும் பாப்புலர் ஆகிவிடுவார். தெலுங்கில் தன்னுடன் இரண்டு படங்களில் ஜோடியாக நடித்த விஜய் தேவரகொண்டாவை ராஷ்மிகா காதலிப்பதாக இதற்கு முன் பல செய்திகள் வந்தன. ஆனால், இருவருமே மறுத்து வந்தனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இருவரும் மும்பையிலிருந்து மாலத்தீவிற்கு விடுமுறைக்காகச் சென்றதாக செய்திகள் வந்தன. இருவரும் அங்கு ஒன்றாக தங்கியுள்ளார்கள் என்பதற்கு இன்னும் எந்த புகைப்பட ஆதாரமும் வெளியாகவில்லை. மாலத் தீவிலிருந்து ராஷ்மிகா மட்டுமே புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். ஆனால், விஜய் தேவரகொண்டா எந்த ஒரு புகைப்படத்தையும் பகிரவில்லை. இருப்பினும் ராஷ்மிகா சில புகைப்படங்களில் அணிந்துள்ள கூலிங் கண்ணாடி அவர்கள் இருவரும் ஒன்றாகத் தங்கியுள்ளார்கள் என்பதைக் காட்டிக் கொடுத்துள்ளது. ராஷ்மிகா அதை வேண்டுமென்றேதான் அணிந்துள்ளார் என்றும் கிசுகிசுக்கிறார்கள்.
மும்பை ஏர்போர்ட்டில் விஜய் தேவரகொண்டா கிளம்பிய போது அந்த கூலிங் கண்ணாடியைத்தான் அணிந்திருந்தார் என்றும் சமூக வலைத்தளங்களில் இரண்டு புகைப்படங்களையும் பதிவிட்டு அவர்கள் காதலர்கள்தான் என கமெண்ட் அடித்து வருகிறார்கள். ராஷ்மிகா தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்து வருவதால் தனது காதலைப் பற்றி சொல்லத் தயங்குகிறார் என்று தெரிகிறது.