மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் நானே வருவேன் படம் வெளியானது. அடுத்து வாத்தி வெளியாக உள்ளது. தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷான், நிவேதா சதிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து அடுத்தக்கட்ட படிப்பிடிப்பிற்காக செட் அமைக்கும் வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படக்குழுவினரும் சிவராஜ்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம் .