பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
தமிழில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் சில படங்களில் நடித்து தனக்கென தனிப் பெயரைப் பெற்றுள்ளவர் அஞ்சலி. அக்டோபர் 27ம் தேதி வெளியாக ஓடிடியில் வெளியாக உள்ள 'ஜான்ஸி' என்ற தெலுங்குப் படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இயக்குனர் விஷ்ணுவர்தன் தம்பி நடிகர் கிருஷ்ணா தயாரித்துள்ள இந்தப் படத்தை திரு இயக்கியுள்ளார். இவர் விஷால் நடித்த 'தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன்' மற்றும் கார்த்திக், கௌதம் கார்த்திக் நடித்த 'மிஸ்டர் சந்திரமௌலி ஆகிய படங்களையும், தெலுங்கில் கோபிசந்த் நடித்த 'சாணக்யா' படத்தையும் இயக்கியவர்.
தன்னுடைய பழைய ஞாபகங்களை இழந்த அஞ்சலியை சிலர் துரத்துகிறார்கள். அவர்கள் எதற்காகத் துரத்துகிறார்கள் , அது அஞ்சலியை எப்படி பாதிக்கிறது என்பதுதான் படத்தின் கதையாம். ஓடிடியில் வரும் எந்த மொழிப் படமாக இருந்தாலும் பின்னர் மற்ற மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியாவதுண்டு. அந்த விதத்தில் இந்தப் படமும் தமிழில் வெளியாகலாம்.
அஞ்சலி தற்போது தெலுங்கில் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிக்கும் படத்திலும், தமிழில் நிவின் பாலி ஜோடியாக, ராம் இயக்கத்தில், 'ஏழு கடல் ஏழு மலை' படத்திலும் நடித்து வருகிறார்.