'மதராஸி'யில் வட இந்தியர், தென் இந்தியர் மோதலா? : ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆரின் 'இதயக்கனி'க்கு இன்று பொன்விழா | பேண்டஸி படமாக 'விஸ்வம்பரா' | தமிழ் படத்தில் இங்கிலாந்து நடிகை | நடிகை பாலியல் குற்றச்சாட்டு : கேரள இளைஞர் காங்கிரஸ் பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ | பிளாஷ்பேக் : அவமானங்களை வெகுமானமாக்கி வென்ற சிரஞ்சீவி | ரஜினிகாந்த் 50 : விழா நடத்துமா தமிழ்த் திரையுலகம்? | தள்ளிப் போகிறது 'டுயூட்' | மீண்டும் விஷால், அஞ்சலி கூட்டணி | சிம்பு கையால் பட பெட்டிகளில் ரூ 500 : டி.ஆர் சொன்ன புது தகவல் |
ரவி அரசு இயக்கத்தில் விஷால், துஷாரா விஜயன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் லேட்டஸ்ட்டாக அஞ்சலி இணைந்துள்ளார். இதற்கு முன்பு விஷாலுடன் மதகஜராஜா படத்தில் இணைந்து அஞ்சலி நடித்தார். 13 ஆண்டுகளுக்குபின் அந்த படம் வெளியாகி வெற்றி பெற்றது. சமீபத்தில் அஞ்சலி கவுரவ வேடத்தில் வந்த பறந்து போ படமும் வெற்றி அடைய, அந்த சென்டிமென்ட் காரணமாக, கதைக்கும் அவர் தேவைப்பட்டதால் இதில் கமிட்டாகி இருப்பதாக தகவல்.
சென்னையை காலி செய்துவிட்டு சில ஆண்டுகளுக்கு முன்பே ஐதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டார் அஞ்சலி. ஆனால், தமிழ் படங்களில் ஹோம்லி ரோலுக்கு அழைத்தாலும், கவர்ச்சி ரோலுக்கு அழைத்தாலும், கவுரவ வேடத்திற்கு அழைத்தாலும் மறுக்காமல் நடித்து கொடுத்துவிட்டு போகிறார். விஷாலின் இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கிடையே ஆகஸ்ட் 29ல் வரும் தனது பிறந்தநாளில் நடிகர் சங்கம், திருமணம் குறித்து முக்கிய அறிவிப்பை விஷால் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.