ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் பாலா. இயக்குனர் சிவாவின் தம்பியான இவர் 'வீரம்' படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார். தொடர்ந்து மலையாள படங்களில் கவனம் செலுத்தி நடித்து வந்த இவர் கடந்த 2010ம் ஆண்டு பாடகியான அம்ருதா சுரேஷை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு அவந்திகா என்கிற பெண் குழந்தையும் உண்டு. கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2௦16-ல் நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இந்த நிலையில் சில வருடங்களாக தனிமையில் வாழ்ந்த பாலா கடந்த 2021 செப்டம்பரில் கேரளாவை சேர்ந்த டாக்டர் எலிசபெத் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர்கள் திருமணம் நடந்து முடிந்து ஒரு வருடமே ஆகியுள்ள நிலையில் தற்போது பாலா தனது மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக செய்திகள் வெளியாகின.
இதுபற்றி பாலா ஒரு வீடியோ வெளியிட்டு பின் அதை நீக்கிவிட்டார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது : “நமது முதல் திருமணம் தோல்வியில் முடியும்போது அதுபற்றி பெரிதாக நினைக்கவில்லை. அதேசமயம் இரண்டாவது திருமணமும் தோல்வி என்றால் அதைப்பற்றி நினைக்க துவங்குகிறோம். உங்களில் பலர் நான் எலிசபெத்துடன் பேசக்கூடாது என வற்புறுத்துகிறீர்கள். இங்கே உங்களுக்கெல்லாம் ஒரு விஷயத்தை சொல்கிறேன். அவள் என்னைவிட சிறந்த நபர். அவள் ஒரு டாக்டர். அவள் மன அமைதிக்கு கொஞ்சம் இடம் கொடுங்கள். அவள் ஒரு பெண்.. நான் எல்லாவற்றையும் மாற்றுவேன்.. எனது வாழ்க்கையில் இது வலி மிகுந்த நாட்கள்.. நான் என்னைப் பற்றி பேசுவதற்கு தகுதி வாய்ந்த நபர் தான். ஆனால் இப்போது அதை நான் செய்யப்போவதில்லை. தயவுசெய்து யாரும் என்னை தூண்டிவிட வேண்டாம்” என்று கூறியுள்ளார் பாலா.