தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சூது கவ்வும் படத்தின் மூலம் அறிமுகமான அசோக் செல்வன், தொடர்ந்து பீட்சா 2, தெகிடி, ஓ மை கடவுளே படங்களில் நடித்திருந்தார். தற்போது நித்தம் ஒரு வானம் படத்தில் நடித்து முடித்துள்ளார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்தை ரா.கார்த்திக் இயக்கியுள்ளார். ரித்துவர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவதா, சிவாத்மிகா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
வரும் நவம்பர் 4ம் தேதி வெளியாக உள்ள இப்படம் குறித்து அசோக் செல்வன் கூறுகையில், ‛நான் காதல் கதையம்சம் கொண்ட படங்களில் நிறைய நடித்துவிட்டேன். எனவே காதல் படங்களில் நடிப்பதை நிறுத்திவிடலாம் என முடிவு செய்தேன். நித்தம் ஒரு வானம் கதையை சொன்னதும் பிடித்துப்போனதால் ஒப்புக்கொண்டேன். இதில் 3 கதைகள் உள்ளன. மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடித்துள்ளேன். கொங்கு மண்டல மக்கள் பேசும் மொழி சாயலில் பேசி நடித்துள்ளேன். எனது படங்களில் 2 அல்லது 3 கதாநாயகிகள் இருந்தால் தான் நடிப்பேன் என இயக்குனரை நான் நிர்பந்திப்பதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. அது தானாக அமைந்துவிடுகிறது. ஓ மை கடவுளே படத்தின் 2ம் பாகத்தை வாய்ப்பு அமையும்போது எடுப்போம்' என்றார்.