துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
சிம்பு நடித்த ‛ஈஸ்வரன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நித்தி அகர்வால். தொடர்ந்து ஜெயம் ரவி உடன் பூமி படத்தில் நடித்தார். தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஜோடியாக கலகத் தலைவன் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். நவ., 18ல் இந்த படம் திரைக்கு வருகிறது.
நித்தி அகர்வால் தினமலருக்கு அளித்த பேட்டியில் சர்ச்சைகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‛‛என்னைப்பற்றி சர்ச்சையான செய்திகள் வந்தால் இரண்டு பேரிடம் மட்டும் தான் நான் தெளிவுப்படுத்த வேண்டும். அது எனது அப்பா, அம்மா மட்டுமே. அதற்குமேல் அதை பெரிதாக எடுக்க மாட்டேன். ஆரம்பத்தில் இதுபோன்ற சர்ச்சையான செய்திகள் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது, பின்னர் அது பழகிவிட்டது'' என்கிறார்.