5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
இம்சை அரசன் 24ம் புலிகேசி பட பிரச்னையால் நடிப்பை விட்டு சிலகாலம் ஒதுங்கியிருந்தார் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பின் அவர் நாயகனாக ரீ-என்ட்ரி கொடுத்து நடித்துள்ள படம் ‛நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'. ‛தலைநகரம்' படத்தை இயக்கிய சுராஜ், அந்த படத்தில் வடிவேலு நடித்த நாய் சேகர் கேரக்டரையே படத்தின் தலப்பாக்கி இந்த படத்தை இயக்கி உள்ளார்.
காமெடி கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்த படத்திலிருந்து தற்போது ‛அப்பத்தா' என்ற வீடியோ பாடலை வெளியிட்டுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். விவேக் பாடல் வரிகள் எழுத, வடிவேலுவே பாடி உள்ளார். பிரபுதேவா நடனம் அமைந்துள்ளார். வடிவேலுவின் குரல், அவரது காமெடியான நடனத்துடன் கூடிய உடல்மொழி ஆகியவற்றால் 24மணிநேரத்திற்குள் இந்த பாடலுக்கு 52 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்து வரவேற்பை பெற்றது.