மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
ஏஜென்ட் ஸ்ரீவஸ்தவா என்கிற தெலுங்கு படத்தின் ரீமேக் ஏஜெண்ட் கண்ணாயிரம். சந்தானம், ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ராம்தாஸ், இந்துமதி, மதன் தட்சிணாமூர்த்தி மற்றும் ஆதிரா நடித்துள்ளனர். மனோஜ் பீதா இயக்கி உள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, தேனி ஈஸ்வர் மற்றும் சரவணன் ராமசாமி ஒளிப்பதிவு செய்துள்ளனர். வருகிற 25ம் தேதி படம் வெளிவருகிறது.
படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் சந்தானம் பேசியதாவது: இது ரீமேக் படமாக இருந்தாலும், அதில் பல மாற்றங்களை இயக்குனர் செய்துள்ளார். தெலுங்கு ஒரிஜினல் படத்தில் ஒரு உணர்வுபூர்வமான அம்மா- மகன் கதை இருக்கும். அதை அந்த படத்தில் முழுமையாக பயன்படுத்தவில்லை, அதை இந்த படத்தில் இயக்குனர் எடுத்து வந்து இருக்கிறார். அதனால் இந்த படம் புதுவிதமாக இருக்கும்.
என்னை கொஞ்சம் கூட காமெடி செய்ய விடவில்லை. இந்த படத்திற்காக குதிரை ஏற்றம் கற்றுகொண்டேன், படத்தில் சில ஆக்சன் காட்சிகளை இயக்குனர் வைத்துள்ளார். அது அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. ரியா சுமன், புகழ் என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரு புதுவிதமான கதாபத்திரமாக தோன்றுவார்கள். யுவன் சங்கர் ராஜா இசை இந்த படத்தில் முக்கிய பங்காற்றியுள்ளது. என்றார்.