துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
பாலிவுட்டின் சீனியர் நடிகர்களில் ஒருவர் குல்ஷன் குரோவர். எண்ணற்ற ஹிந்திப் படங்களில் நடித்துள்ளார். திரையுலகில் 40 ஆண்டு கால அனுபவம் கொண்டவர், முதல் முறையாக 'இந்தியன் 2' படம் மூலம் தமிழில் நடிக்க வந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு சென்னையில் 'இந்தியன் 2' படப்பிடிப்பிற்காக வந்துள்ளேன் என வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். நேற்று கமல்ஹாசனுடன் நடிப்பது பற்றி, “தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில், கிரேட் கமல்ஹாசனுடன் நடிப்பது உற்சாகமாக உள்ளது” எனக் குறிப்பிட்டு கமல்ஹாசனுடன் அவர் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
'இந்தியன் 2' படத்தில் ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டமே நடித்து வருகிறது. தமிழிலிருந்து மிகப் பிரம்மாண்டமான பான் இந்தியா படமாக இப்படம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. 2023ம் ஆண்டு மத்தியில் இப்படம் வெளியாகலாம்.