துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
2022ம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதம் நாளை பிறக்கப் போகிறது. நாளை மறுநாள் டிசம்பர் 2ம் தேதி அம்மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையாக வருகிறது. அன்றைய தினம் விஜய் சேதுபதி நடித்துள்ள 'டிஎஸ்பி', விஷ்ணு விஷால் நடித்துள்ள 'கட்டா குஸ்தி' உள்ளிட்ட படங்கள் வெளியாகிறது. இந்த இரண்டு படங்களைத் தவிர சில சிறிய படங்கள் வந்தாலும் 'டிஎஸ்பி, கட்டா குஸ்தி' ஆகிய இரண்டு படங்களுக்கு இடையேதான் போட்டி இருக்கும்.
விஜய் சேதுபதியின் முந்தைய தியேட்டர் வெளியீடுகள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அதனால், 'டிஎஸ்பி' படத்தின் வெற்றியை அவர் அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். விஷ்ணு விஷால் நடித்து இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளிவந்த 'எப்ஐஆர்' படம் வியாபார ரீதியாக வெற்றி பெற்ற படமாக அமைந்தது. இப்போது அவர் நடித்து வெளிவர உள்ள 'கட்டா குஸ்தி' படம் தமிழ், தெலுங்கில் வெளியாகிறது. தமிழில் உதயநிதி ஸ்டாலினும், தெலுங்கில் நடிகர் ரவி தேஜாவும் இப்படத்தை வெளியிடுகிறார்கள்.
இரண்டு படங்களுமே எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் வெளியாகிறது. ஆன்லைன் முன்பதிவுகளும் மிகச் சுமாராகவே இருக்கின்றன. கடந்த வாரம் வெளியான படங்கள் பெரிதாக வசூலிக்காத நிலையில் இந்த வாரம் வெளியாக உள்ள படங்கள் எப்படி இருக்கப் போகிறதோ என தியேட்டர்காரர்கள் கவலையுடன் இருக்கிறார்கள். டிசம்பரில் வரும் மற்ற படங்களாவது வசூலிக்குமா என்பது அவர்களது எதிர்பார்ப்பு. இல்லையென்றால் 2023 பொங்கல் வரை அவர்கள் காத்திருக்க வேண்டும்.