தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களுக்கு பின் விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். ரஞ்சித் இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். விக்ரமுடன் மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். கோலார் தங்க வயல் குறித்த கதையில் இப்படம் உருவாகி வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஒகேனக்கல் அருகே நடைபெற்று வருகிறது.
படக்குழுவினர் உடன் தண்ணீரில் குளித்து விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ள விக்ரம், ‛‛இன்று ஒகேனக்கல் அருகில் தங்கலான் படப்பிடிப்பு கடினமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. தண்ணீர் வா வா என்று அழைத்தது. பேக் அப் என்று கேட்டதும் ஒரே குதி தண்ணீரில். என் நண்பர்களை விடுவேனா. என்ன?! ஐயோ வேண்டாம் என்று பதறிய சிலர். கடைசியில் தண்ணீரை விட்டு வர மறுத்ததுதான் மிச்சம்'' என்று மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.