இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் |
விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் அடுத்து ‛கலியுகம்' என்ற படத்தில் நடித்துள்ளார். ஆடுகளம் கிஷோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பிரமோத் சுந்தர் இயக்கி உள்ளார். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் படத்தின் முதல்பார்வை வெளியாகி உள்ளது.
படம் பற்றி இயக்குனர் கூறுகையில், ‛‛மூன்றாம் உலகப் போருக்கு பின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை இந்த படம் விவரிக்கிறது. உலகில் பல நாடுகள் சந்திக்க உள்ள இழப்புகள், சமகால நெருக்கடிகளும் இந்த படத்தில் இடம் பெறுகிறது'' என்றார் பிரமோத் சுந்தர்.