தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தனுஷ் நடித்த, ‛வாத்தி' படம் தமிழ், தெலுங்கு என, இரு மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர் வம்சி தயாரிக்க, வெங்கி அட்லுாரி இயக்கி உள்ளார். படம் அடுத்தாண்டு வெளியாகிறது. இதனிடையே, வாத்தி படத் தயாரிப்பாளருடன், 'ஆரண்யா சினி கம்பைன்ஸ்' போட்ட ஒப்பந்தம், நீதிமன்றம் சென்றுள்ளது. 'வாத்தி படத்தை யாரும் வாங்கி ஏமாற வேண்டாம்' என, வினியோக நிறுவனம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, ஆரண்யா சினி கம்பைன்ஸ் அறிக்கை: வாத்தி படம் டிச.,2ல் வெளியாகும் என்றபோது, ஐந்து ஏரியாக்களுக்கு படத்தை வெளியிட, 8 கோடி ரூபாய் ஒப்பந்தம் பேசி முடிக்கப்பட்டு, அக்.,18ல் ஐந்து கோடி ரூபாய் முன்பணம் வழங்கப்பட்டது. தீபாவளிக்கு பின் ஒப்பந்தம் போடலாம் என, தயாரிப்பு தரப்பு கூறியது. ஆனால், குறிப்பிட்டபடி ஒப்பந்தமும் போடவில்லை; படத்தையும் குறிப்பிட்ட தேதியில் வெளியிடவும் இல்லை. இதனால், முன்பணத்தை திருப்பித் தரக் கோரினோம்.
வட்டியின்றி தர சம்மதித்த தயாரிப்பு தரப்பு, நவ., 23ல் 2 கோடி ரூபாய் மட்டும் கொடுத்தது. நவ.,26ல் 1 கோடி ரூபாய் தருவதாக கூறினர்; தரவில்லை. இந்நிலையில், படத்தை பிப்., 17ல் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். படத்தை நாங்களே வெளியிட முடிவு செய்து, தயாரிப்பு தரப்பை அணுகினோம்; உரிய பதில் இல்லாததால் நீதிமன்றம் சென்றுள்ளோம். காப்புரிமை சட்டப்படி, தற்போதைய நிலையில், வாத்தி படத்தின் ஐந்து ஏரியா வினியோக உரிமை, ஆரண்யா சினி கம்பைன்ஸ் வசம் உள்ளதால், இடைத்தரகர்கள் பேச்சைக் கேட்டு, வினியோகஸ்தர்கள் யாரும் ஏமாற வேண்டாம். இவ்வாறு அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.