சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' | இயக்குனர் அவதாரம் எடுக்கும் கென் கருணாஸ்! | 'கூலி' பட டிக்கெட் கட்டணம் ரூ.500: தியேட்டர்களுக்கு தரப்படும் அழுத்தம்! | மிஷ்கின் என்னை பாப்பா என்று அழைப்பார்! : ஸ்ருதிஹாசன் | ரஜினிக்கு வாழ்த்து சொன்ன சந்திரபாபு நாயுடு மகன் |
டோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய தமிழ் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில், மஹா மூவிஸின் மகேந்திரநாத் கொண்டலா தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அனில் கட்ஸ் இயக்கத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் அவர் நடித்து வரும் படத்திற்கு ‛சபரி' என பெயரிடப்பட்டுள்ளது.
தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தியில் உருவாகிவந்த இதன் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. படம் பற்றி வரலக்ஷ்மி கூறுகையில், ‛‛எங்கள் 'சபரி' படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. மகேந்திரன் போன்ற தயாரிப்பாளர் எங்களுக்கு கிடைத்திருப்பது அதிர்ஷ்டம். வலுவான இந்தக் கதையை நம்பி படத்திற்கு நிறைய செலவு செய்திருக்கிறார். நான் வேலை பார்த்த தயாரிப்பாளர்களில் மிகச் சிறந்தவர். அவர் கொடுத்த ஒவ்வொரு ரூபாயையும் இயக்குனர் அனில் கட்ஸ் படமாக திரையில் கொண்டு வந்துள்ளார்.
பல இடங்களில் இந்தக் கதையை நாங்கள் படமாக்கி உள்ளோம். படம் நன்றாக வந்துள்ளது. இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் டப்பிங் பணிகள் தொடங்கும். விரைவில் திரையரங்குகளில் படத்தை வெளியிடுவோம்” என்றார்.
தயாரிப்பாளர் மகேந்திரநாத் கொண்டலா கூறுகையில், “இந்தக் கதை ஒரு வலுவான எமோஷனல்- த்ரில்லர். படப்பிடிப்பை நாங்கள் முடித்து விட்டோம். தயாரிப்பாளர்களை நினைத்து பார்க்கும் ஒரு சில திரைக்கலைஞர்களில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரும் ஒருவர். அவருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்” என்றார்.
படத்தின் இயக்குநர் அனில் கட்ஸ் பேசும்போது, “நாவலின் கதையை எடுத்து அதை படமாக்கியுள்ளோம். இதில் படத்திற்குரிய அனைத்து கமர்ஷியல் அம்சங்களும் இருக்கிறது. த்ரில்லர், எமோஷன்ஸ் என உள்ளடக்கிய இந்தப் படம் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் திருப்திப்படுத்தும். முன்னணி கதாபாத்திரத்தில் இளம் வயதுள்ள, சுதந்திரமான, புத்திசாலிப் பெண்ணாக 'சபரி' படத்தில் வரலக்ஷ்மி நடித்திருக்கிறார். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது” என்கிறார்.