துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
சின்னத்திரை பிரபலமான ப்ரியதர்ஷினி நீண்ட நாட்களுக்கு பிறகு சமீபத்தில் தான் தொலைக்காட்சி சீரியல்களில் ரீ-என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். தற்போது அவர் 'எதிர்நீச்சல்' தொடரில் ரேணுகா என்ற கதாபாத்திரத்திலும், விஜய் டிவியின் 'நம்ம வீட்டு பொண்ணு' தொடரில் செல்வி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். அவர் நடிப்பில், மக்களுக்கு மிகவும் பிடித்தமான கதாபாத்திரம் ரேணுகா கதாபாத்திரம் தான். சொல்லப்போனால் ப்ரியதர்ஷினி 'நம்ம வீட்டு பொண்ணு' தொடரில் நடிப்பது கூட அவரது ரசிகர்கள் பலருக்கும் தெரியாது.
இந்நிலையில், ப்ரியதர்ஷினிக்கு பதில் பானுமதி என்ற புதிய நடிகை நடிக்க உள்ளதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் சிலர் 'எதிர்நீச்சல்' தொடரிலிருந்து தான் ப்ரியதர்ஷினி விலகிவிட்டார் என அப்செட்டாகினர். ஆனால், ப்ரியதர்ஷினி எதிர்நீச்சல் தொடரிலிருந்து விலகவில்லை. விஜய் டிவியின் 'நம்ம வீட்டு பொண்ணு' தொடரில் நடித்து வந்த செல்வி கதாபாத்திரத்திலிருந்து தான் விலகியுள்ளார். தற்போது அந்த செல்வி கதாபாத்திரத்தில் தான் பானுமதி நடிக்க உள்ளார். இந்த உண்மையை தெரிந்து கொண்ட ரசிகர்கள் நிம்மதியடைந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.