தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கொச்சி சட்டக்கல்லூரியில் நடந்த விழாவில் நடிகை அபர்ணா பாலமுரளி கலந்து கொண்டார். அப்போது மேடையேறிய மாணவர் ஒருவர் அபர்ணாவின் தோளில் கைபோட முயன்றார். அவரிடமிருந்து நழுவிய அபர்ணா அந்த மாணவரின் அத்துமீறலை அந்த இடத்திலேயே கண்டித்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த மாணவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் தனக்கு மிகுந்த வேதனையை அளித்தது என்றும், ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவரது உடலை தொடுவது கடும் கண்டனத்திற்குரியது என்றும் அபர்ணா பாலமுரளி கூறினார். இது குறித்து நான் புகார் கூற விரும்பவில்லை. அதற்கு எனக்கு நேரமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில் நடந்த சம்பவத்திற்கு சட்டக் கல்லூரி மாணவர் பேரவை மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறி நடந்து கொண்ட கல்லூரி மாணவரை சட்டக் கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.