தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் தற்போது 'இந்தியன் 2, அயலான்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஹிந்தியில் ஓடிடியில் நேரடியாக வெளியாகும் 'சாத்ரிவாலி' என்ற படத்திற்கான நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்ட போது தென்னிந்திய சினிமா பற்றியும் பேசினார்.
“இந்தியன் 2' படத்தில் நடிப்பது மிகவும் உற்சாகமான ஒன்று. கமல்ஹாசன் சார் அவருக்குள் ஒரு பல்கலைக்கழகத்தையே வைத்துள்ளார். அவருடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் அதிர்ஷ்டமானது. கமல் சார், அமித் சார் ஆகியோர் பல்கலைக்கழகங்கள். அவர்கள் தான் சினிமா. இந்திய சினிமா அவர்களைச் சார்ந்தது. 100 வருட இந்திய சினிமாவில் அவர்கள் 60 வருடங்களாக இருக்கிறார்கள். அது மிகவும் சாதனையான விஷயம்.
குறுக்கு வழியில் வெற்றி கிடைக்காது என நம்மை உத்வேகப்படுத்தியவர்கள். நாம் செய்யும் வேலையில் மிகவும் ஆர்வமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அவர்களைப் போன்ற சாதனைகளைச் செய்ய முடியும்,” என்று தெரிவித்துள்ளார்.
'இந்தியன் 2, அயலான்' இரண்டு படங்களிலும் தன்னுடைய வசனப் பகுதிக்கான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், பாடல்களில் மட்டும் இன்னும் நடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.