தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ் நடிகர்கள் தெலுங்குப் பக்கமும் தங்களது பார்வையை தற்போது திருப்பியுள்ளனர். தெலுங்கில் நேரடியாக நடிக்காமல் தங்களது தமிழ்ப் படங்களை அங்கு டப்பிங் செய்து வெளியிட்டு தங்களது மார்க்கெட்டை விரிவாக்க நினைத்தனர். ஆனால், டப்பிங் படங்களுக்கு பெரிய அளவில் தெலுங்கு ரசிகர்கள் ஆதரவு தரவில்லை. அந்த விதத்தில் விஜய், சிவகார்த்திகேயன் ஆகியோர் ஏமாற்றமடைந்தார்கள். ஆனால், தனுஷ் நேரடி தெலுங்குப் படத்தில் நடித்து அங்கு தனது தடத்தைப் பதித்துள்ளார்.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் அவர் நடித்த 'வாத்தி' படம் தெலுங்கில் 'சார்' என்ற பெயரில் வெளியானது. படத்திற்கு ரசிகர்களது வரவேற்பு சிறப்பாக இருந்ததால் அங்கு மூன்று நாட்களிலேயே படம் 15 கோடி வசூலைக் கடந்துள்ளது. சுமார் 6 கோடிக்கு விற்கப்பட்ட படம் நிகர வசூலாக 8 கோடியை வசூலித்துவிட்டதாம். மூன்றே நாட்களில் தனுஷின் படம் தெலுங்கில் லாபத்தை ஈட்டியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள்.
அதே சமயம் தமிழில் மூன்று நாட்களில் 12 கோடிக்கும் கூடுதலாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் லாபத்தைப் பெற இன்னும் 10 கோடி வரை வசூலித்தாக வேண்டுமாம். இந்த வாரம் பெரிய படங்கள் எதுவும் இல்லாததால் எப்படியும் சமாளிக்க வாய்ப்புள்ளது என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.