துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
சமீபகாலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சந்தீப் கிஷன் தான் நடித்த அதிரடி திரைப்படமான மைக்கேலை மிகவும் நம்பினார். புரியாத புதிர், யாருக்கும் அஞ்சேல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கினார். திவ்யன்ஷா கவுசிக், தீப்ஷிகா, கவுதம் மேனன், வருன் சந்தோஷ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். விஜய்சேதுபதியும், வரலட்சுமியும் கவுரவ தோற்றத்தில் நடித்திருந்தார்கள். பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த 3ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியானது. இரண்டு மொழிகளிலும் வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் தியேட்டரில் வெளியான 20 நாளில் ஓடிடி தளத்திற்கு வந்திருக்கிறது. நாளை மறுநாள் (24ம் தேதி) ஆஹா தளத்தில் வெளியாகிறது. தாயை கொன்ற தந்தையை மகன் பழிவாங்கும் கதை.