தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழில் காமெடியில் கலக்கி வந்த சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது அவர் கிக் படத்தில் நடித்துள்ளார். அடுத்தப்படியாக ‛வடக்குபட்டி ராமசாமி' என்ற படத்தில் மேகா ஆகாஷ் உடன் இணைந்து நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு பழநி அருகே நடக்கிறது. படப்பிடிப்பு இடைவெளியில் பழநி முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார். மலையை சுற்றி கிரிவலம் வந்த சந்தானம் பின்னர் அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கு சென்று பக்தர்களுடன் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடித்துவிட்டு திரும்பிய சந்தானத்துடன் ஏராளமான ரசிகர்கள் புகைப்படம், செல்பி எடுத்தனர். பின்னர் ரோப்கார் மூலம் மலை இறங்கியவர் மீண்டும் படப்பிடிப்புக்கு சென்றார்.
கடந்த மாதம் பழநி மலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது முதல் தினமும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு சென்று வருகின்றனர். பிரபு, அமலாபால், சமந்தா, கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் முருகனை தரிசித்து சென்றனர். இப்போது சந்தானம் வழிபாடு நடத்தி உள்ளார்.