இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
நடிகை ஸ்ரீ லீலா 2019-ம் ஆண்டு கன்னட சினிமாவில் கிஸ் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . அதனை தொடர்ந்து கடந்த 2021ல் பெல்லி சண்டை என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகம் ஆனார். சமீபத்தில் நடிகர் ரவி தேஜா நடித்து வெளிவந்த தமாகா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.
தற்போது மகேஷ் பாபு, பவன் கல்யாண், நந்தமுரி பாலகிருஷ்ணா என முண்ணனி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் ஸ்ரீ லீலா. இந்நிலையில் இயக்குனர் கவுதம் தின்னூரி இயக்கத்தில் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கு ஸ்ரீ லீலா கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளார் .