துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்கர் பச்சான் இயக்கி உள்ள பட 'கருமேகங்கள் கலைகின்றன'. பாரதிராஜா, கவுதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன், யோகிபாபு நடித்திருக்கும் இப்படத்தின் முதல் தோற்றத்தை கமல்ஹாசன் நேற்று வெளியிட்டார். கமல்ஹாசன் அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. பாரதிராஜா, இயக்குநர் தங்கர்பச்சான், தயாரிப்பாளர் டி.துரை வீரசக்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியல் கமல், தங்கர் பச்சானிடம் பேசும்போது “தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பாளி பாரதிராஜா ஒரு படைப்பை இந்த அளவு புகழ்ந்து பார்த்ததில்லை. இப்படத்தில் நடித்த பிறகு தான் ஓய்வுபெற்று விடலாம் என்று சொல்லும் அளவுக்கு அவர் கூறியது எனக்கு பேராச்சர்யம். இப்பொழுதே உடனடியாக படம் பார்க்கும் ஆவல் வந்துவிட்டது. விரைவில் படத்தை காட்டுங்கள்” என்றார். மேலும் இயக்குநர் தங்கர் பச்சானுக்கும், தயாரிப்பாளர் டி.துரை வீரசக்திக்கும் மற்றும் படக்குழுவினருக்கும் தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.