துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார், சிம்பு நடிக்கிறார். துல்கர் சல்மான் நடித்த 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' மூலம் புகழ் பெற்றவர் தேசிங்கு பெரியசாமி. பெரிய வரவேற்பை பெற்ற அந்த படத்திற்கு பிறகு தற்போது இந்த படத்தை இயக்குகிறார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் “என் வாழ்க்கையின் நிகழ்ந்துள்ள கற்பனைக்கு எட்டாத அற்புதங்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக உணர்கிறேன். உலக நாயகனுக்கு கதை சொல்லும் பாக்கியம் கிடைத்தது மற்றும் அவரின் தயாரிப்பின் கீழ் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கனவு நனவானது; அற்புதங்கள் நிகழ்கின்றன” என பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “சினிமா, தலைமுறைகளை இணைக்கிறது; இடைவெளிகளைக் குறைக்கிறது. இளமைக்கும் திறமைக்கும் வாழ்த்துகள்” என பதிவிட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில், “கனவு நனவானது” என பதிவிட்டுள்ளார்.