மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா |

தெலுங்கு திரையுலகில் சீனியர் நடிகராக வலம் வருபவர் நடிகர் மோகன்பாபு. இவரது இரண்டு மகன்கள் விஷ்ணு மஞ்சு மற்றும் மனோஜ் மஞ்சு. மகள் லட்சுமி மஞ்சு.. இதில் அவ்வப்போது சில படத்தில் நடித்துவரும் விஷ்ணு மஞ்சு கடந்த சில மாதங்களுக்கு முன் தெலுங்கு திரையுலக நடிகர் சங்க தலைவராகவும் வெற்றி பெற்றார். மகள் லட்சுமி மஞ்சுவும் சில படங்களில் செலக்டிவாக நடித்து வருகிறார். மனோஜ் மஞ்சுவும் நடிகர் தான் என்றாலும் கடந்த ஐந்து வருடங்களாக படம் எதிலும் நடிக்கவில்லை.. இவருக்கும் பூமா மவுனிகா என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் தான்.
இந்தநிலையில் மனோஜ் மஞ்சு தனது சகோதரர் விஷ்ணு மஞ்சு தனது வீட்டிற்கு வந்து தன்னுடன் கைகலப்பில் ஈடுபட்ட வீடியோ ஒன்றை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவுடன், “இதுதான் அவர் (விஷ்ணு மஞ்சு) எங்கள் வீட்டிற்கு வந்ததும் எங்களுக்கு வேண்டிய நபரை அடித்ததும்.. இதுதான் இப்போதைய சூழ்நிலை” என்று கூறியிருந்தார். இது தெலுங்கு திரை உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் இந்த வீடியோவை மனோஜ் மனோஜ் மஞ்சு டெலீட் செய்து விட்டாலும் சோசியல் மீடியாவில் இந்த வீடியோ வேகமாக பரவியது. தற்போது இதுகுறித்து கூறியுள்ள மனோஜ் மஞ்சு, “வாழுங்கள்.. வாழ விடுங்கள்.. உங்களைச் சுற்றி உள்ளவர்களை உள்ளன்புடன் நேசியுங்கள்” என்று கூறியுள்ளார்.
இதன் பின்னணியில் நடந்தது என்னவென்றால் கடந்த சில காலமாகவே சகோதரர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. சமீபத்தில் மஞ்சு மனோஜின் திருமணம் நடைபெற்றது. ஆனால் மணப்பெண் பூமா மவுனிகாவை மஞ்சு மனோஜ் திருமணம் செய்ததில் விஷ்ணுவுக்கு விருப்பமில்லை என்றும், அதனால் கல்யாண நிகழ்வுகள் எதிலும் அவர் கலந்து கொள்ளாமல், திருமணத்திற்கு கூட மூன்றாவது மனிதர் போல பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து சென்று விட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
இதை தொடர்ந்து தற்போது மஞ்சு மனோஜ் வீட்டிற்கு வந்த அவர், அங்கே இருந்த மவுனிகா தரப்பு உறவினர் ஒருவருடன் அங்கே வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை அடித்து விட்டாராம். என்னுடைய உறவினரை எப்படி என் வீட்டிற்கே வந்து அடிக்கலாம் என பதிலுக்கு மனோஜ் மஞ்சு வாக்குவாதத்தில் ஈடுபட, அப்போது அவரையும் தாக்க முற்பட்ட இந்த வீடியோவைத்தான் மனோஜ் மஞ்சு வெளியிட்டுள்ளார் மனோஜ் மஞ்சு.
இந்த சமயத்தில் இவர்களது தந்தை நடிகர் மோகன்பாபு திருப்பதி சென்று இருந்ததால் இவர்களது சகோதரி லட்சுமி மஞ்சு இவர்களுக்குள் சமரசம் ஏற்படுத்தும் முயற்சி இறங்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.