சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

பேஸ்புக், டுவிட்டர் என இரண்டு சமூக வலைத்தளங்கள் இருந்தாலும் சினிமா பிரபலங்கள், குறிப்பாக நடிகைகள் 'போட்டோ' பகிர்வு தளமான இன்ஸ்டாகிராம் தளத்தில்தான் அதிகமான ஈடுபாட்டுடன் பதிவிடுவார்கள். தங்களது விதவிதமான போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட பல நடிகைகள் அத்தளத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவின் வசூல் நடிகராக இருக்கும் விஜய் இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென இன்ஸ்டாகிராம் தளத்தில் புதிய கணக்கு ஒன்றை ஆரம்பித்தார். வந்த சில மணி நேரங்களிலேயே 1 மில்லியன் பாலோயர்கள், தனது முதல் பதிவுக்கு 55 லட்சம் லைக்குகள் என சாதனை புரிந்துள்ளார் விஜய்.
கடந்த இரண்டு நாட்களில் அவருடைய இன்ஸ்டாகிராம் கணக்கை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 5 மில்லியனைக் கடந்துள்ளது. விஜய் வருகைக்குப் பிறகு அத்தளமே கொஞ்சம் பரபரப்பாகி உள்ளது. தமிழ் நடிகர்களில் சிலம்பரசன் 11 மில்லியன் பாலோயர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். விரைவில் அதிக பாலோயர்களைப் பெறும் தமிழ் நடிகர் என்ற சாதனையை விஜய் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னிந்திய அளவில் இன்ஸ்டாகிராம் தளத்தில் 20 மில்லியன் பாலோயர்களுடன் தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன் முதலிடத்தில் உள்ளார். இந்த சாதனையையும் விஜய் சீக்கிரத்தில் முறியடிக்க வாய்ப்புள்ளது.