போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால், விஷால் பிலிம் பேக்டரி என்ற பெயரில் சொந்த பட நிறுவனம் ஒன்றை வைத்துள்ளார். அந்நிறுவனம் மூலம் சுமார் 10 படங்கள் வரை தயாரித்துள்ளார். பைனான்ஸ் வாங்கித்தான் அவர் படங்களைத் தயாரித்து வந்தார். அந்த வகையில் பிரபல பைனான்சியரான அன்புச் செழியனிடம் சுமார் 21 கோடி கடன் வாங்கியிருந்தார். அந்தக் கடனை பின்னர் லைக்கா நிறுவனம் ஏற்றுக் கொண்டது.
அந்தக் கடனை விஷால் திரும்ப அடைக்கும் வரை அவரது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் உரிமைகளை லைக்காவுக்கு தர வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள். அதன்பின் விஷால் பிலிம் பேக்டரி தயாரித்த 'வீரமே வாகை சூடும்' படத்தின் உரிமைகளை லைக்காவுக்குத் தரவில்லை. அதனால், லைக்கா நிறுவனம் விஷால் மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் நீதிமன்றத்தில் விஷால் தரப்பு 15 கோடியை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், அந்தப் பணத்தை செலுத்தாமல் மேல் முறையீடு செய்தார் விஷால். நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மேல் முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் தனி நீதிபதி முன்னர் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தனர். மேலும், நீதிமன்றத்தில் 15 கோடி ரூபாயை நிரந்தர வைப்பீடாக செலுத்தும் வரை விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் எந்த புதிய படங்களையும் வெளியிட தடை விதித்து தீர்ப்பளித்தனர்.
'வீரமே வாகை சூடும்' படத்திற்குப் பிறகு விஷால் அவரது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் எந்தப் படத்தையும் தயாரிக்கவில்லை. அதற்கடுத்து அவர் நடித்து வெளிவந்த 'லத்தி' படத்தை அவரது நண்பர்களான நடிகர்கள் நந்தா, ரமணா ஆகியோர்தான் தயாரித்தனர். தற்போது அவர் நடித்து வரும் 'மார்க் ஆண்டனி' படமும் வேறு தயாரிப்பாளர் தயாரிக்கும் படம்தான்.
நீதிமன்ற உத்தரவை அடுத்து விஷால் அவரது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் இப்போதைக்கு எந்தப் படங்களையும் தயாரிக்க வாய்ப்பில்லை. மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்தால் அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.