சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
சென்னை, திருவான்மியூரில் உள்ள பிரபல நாட்டிய கல்லூரியான கலாஷேத்ரா கல்லூரியில் ஆசிரியைகள் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து மாணவிகள் பலர் அளித்த புகாரின் பேரில் உதவி பேராசிரியர் ஹரிபத்மன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். தற்போது சோசியல் மீடியாவில் பூதாகரமாக வெடித்துள்ள இந்த சம்பவம் குறித்து பிக்பாஸ் போட்டியாளரான அபிராமி தனது கருத்தை கூறியுள்ளார். இவர் முன்னாள் கலாஷேத்ரா மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் அளித்த பேட்டியில், 'நானும் கலாஷேத்ராவின் முன்னாள் மாணவி தான். கலாஷேத்ராவின் ஆசிரியர் நிர்மலா என்னை தொடர்பு கொண்டு ஹரிபத்மனுக்கு எதிராக பேசுமாறு கூறினார். ஹரிபத்மனால் எனக்கு எந்த ஒரு தொந்தரவும் நிகழ்ந்தது இல்லை. ஹரிபத்மன் சிறந்த ஆசிரியர். ஒரு பக்கமாக நின்று பேசாமல் இருதரப்பையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மாணவிகள் பலி ஆடுகளாக மாற்றப்படுகிறார்கள். கலாஷேத்ரா கலாசாரத்தின் அடையாளம். அதற்கு அவப்பெயர் வரும் போது அம்மாவை தவறாக பேசுவது போல் உள்ளது' என்று கூறியுள்ளார். அபிராமியின் இந்த கருத்தானது சோசியல் மீடியாக்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.