நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் |
நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கி வரும் படம் 'தங்கலான்'. இதில் விக்ரம், பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்பட பலர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்க சுரங்கத்தில் நடந்து வந்தது. கோலார் தங்கச் சுரங்கம் உருவான போது அங்கு தமிழக தொழிலாளர்கள் சந்தித்த பிரச்சினைகளை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது.
இந்த நிலையில் நேற்று நடந்த 'பிகே ரோசி' திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் தங்கலான் படம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: 80 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கேஜிஎப்பில் மிகப்பெரிய போர்ஷனை எடுத்து முடித்துள்ளோம். 55 நாட்கள் அங்கே படப்பிடிப்பு நடந்தது. இன்னும் 25 நாட்கள் படப்பிடிப்பு மீதமுள்ளது. படப்பிடிப்பு மே மாதம் முடிந்துவிடும்.
கடுமையான உழைப்பை செலுத்தியுள்ளோம். படப்பிடிப்பு கடும் சவாலாக இருந்தது. இரவு பகல் பார்க்காமல் உழைத்திருக்கிறோம். இந்தப் படம் மக்களுக்கு பிடிக்கும். இந்த ஆண்டு இறுதியில் படம் திரைக்கு வரும். அடுத்த என்ன படம் என்பது குறித்து இன்னும் யோசிக்கவில்லை. கமல் நடிக்கும் படத்திற்கான கதையையும், 'சர்பட்டா பரம்பரை' 2ம் பாகத்திற்கான கதையையும் எழுதிக் கொண்டிருக்கிறேன். என்றார்.