தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

இந்திய சினிமாவில் மேக்அப் போடாமல் நடிக்கும் ஒரே நடிகை சாய்பல்லவிதான் என்கிறார்கள். அதற்கு காரணம் இயற்கையிலே ரோஸ் நிறத்தில் இருக்கும் அவரது முகத்திற்கு மேக்அப் தேவையில்லை என்பார்கள். ஆரம்பத்தில் அவருக்கு முகத்தில் நிறைய பருக்கள் இருந்தன, இதை மறைப்பதற்காக மேக்அப் போட்டபோது அவரது தோற்றமே மாறியது. அதனால் மேக்அப் போட்டு நடிப்பதில்லை என்று சாய்பல்லவி முடிவெடுத்தார். படத்தின் கேரக்டருக்கு ஏற்ப சிகை அலங்காரத்திலும் தோற்றத்திலும் சில மாறுதல்களை மட்டும் செய்து கொள்வார்.
இதுகுறித்து சாய்பல்லவி சில நாட்களுக்கு முன்பு ஒரு நேர்காணலில் வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: எனது முதல் படமான 'பிரேமம்' படத்தில் இருந்து இன்றுவரை நான் ஒரு படத்தில் கூட மேக்கப் போட்டது இல்லை. பள்ளி நாட்களில் எனக்குள் தாழ்வு மனப்பான்மை அதிகம் இருந்தது. முகத்தில் இருக்கும் முகப்பருக்களை பார்த்து வேதனைப்படுவேன். என் குரல் கூட நன்றாக இருக்காது என்று நினைத்தேன்.
பிரேமம் படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்ததை ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்களோ என்று முதலில் பயந்தேன். ஆனால் மேக்கப் இல்லாமல் கூட மிகவும் அழகாக இருக்கிறாய் என்ற பாராட்டு எனக்கு கிடைத்தது. அந்த பாராட்டுதான் எனக்குள் மிகப்பெரிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. அது முதல் மேக்கப் இல்லாமல் நடித்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.