மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான வக்கீல் சாப் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் அதிரடி வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடித்திருந்தார். வேணு ஸ்ரீராம் என்பவர் இயக்கியிருந்தார். ஹிந்தியில் அமிதாப் நடிப்பில் பிங்க் என்கிற பெயரில் வெளியாகி வரவேற்பை பெற்று பின்னர் தமிழில் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்கிற பெயரில் ரீமேக்கும் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த இரண்டு மொழிகளையும் தாண்டி தெலுங்கில் இந்த படம் வெளியான போது கமர்சியலாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதனைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தாங்களே முந்திக்கொண்டு உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார் இயக்குனர் வேணு ஸ்ரீராம். சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர், வக்கீல் சாப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார். பவன் கல்யாண் தற்போது தன் கைவசம் உள்ள படங்களை முடித்ததும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்.