துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
சமந்தா நடிப்பில் குணசேகர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் சாகுந்தலம். புராண காவியமான சாகுந்தலத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சமந்தா. படத்தில் முக்கால்வாசி காட்சிகளில் இவர் சாதாரண வெள்ளை உடை அணிந்து காட்டில் உள்ள ஆசிரமத்தில் வாழும் பெண்ணாக நடித்திருந்தார். ஆனால் கிளைமாக்ஸில் இவர் மன்னனின் அரண்மனைக்கு செல்லும் காட்சியில் கிட்டத்தட்ட 30 கிலோ எடைகொண்ட லெகங்கா போன்ற உடை அணிந்து நடித்திருந்தார். அதை அணிந்துகொண்டு நடித்தபோது அதன் எடையால் தான் சற்றே சிரமப்பட்டதாகவும், எப்போது அந்த காட்சியை படமாக்கி முடிப்பார்கள் என நினைத்ததாகவும் கூட கூறியிருந்தார் சமந்தா.
அதேபோல அந்தப்படத்தில் அசுரர் குல தலைவனாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் பாலிவு நடிகர் கபீர் துஹான் சிங். தமிழில் அஜித்தின் துணிவு, விஷாலின் ஆக்சன் உள்ளிட்ட படங்களில் வில்லனாக இவர் நடித்திருந்தார். இந்த சாகுந்தலம் படத்திற்காக சுமார் 15 கிலோ எடை கொண்ட ஆபரணங்களால் ஆன உடைகளை அணிந்து கொண்டு நடித்ததாக சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார் கபீர் துஹான் சிங்.