மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
'தண்டாயுதபாணி', 'நாயகன்', 'பில்லா பாண்டி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சரவண ஷக்தி இயக்கத்தில் தயாராகி உள்ள புதிய திரைப்படம் 'குலசாமி'. இதில் விமல் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தன்யா ஹோப் நடித்திருக்கிறார். இவர்களுடன் 'குட்டி புலி' சரவண ஷக்தி, வினோதினி வைத்தியநாதன், மகாநதி சங்கர், முத்துப்பாண்டி, ஜெயசூர்யா, போஸ் வெங்கட் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தின் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால் தீரன் அதிகாரம் ஒன்று படம் உருவாக முக்கிய காரணமான முன்னாள் டிஜிபியான ஐபிஎஸ் அதிகாரி ஜாங்கிட் இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் போலீஸ் அதிகாரியாகவே நடித்துள்ளார்.
இந்த படம் குறித்து அவர் தனது சமூகவலைத்தள பக்கங்களில் கூறியவை , " நான் போலீஸ் அதிகாரியாக நடித்த தமிழ் திரைப்படம் குலசாமி ஏப்ரல் 21ஆம் தேதி வெளியாகிறது. அப்பாவி சிறுமிகள் துன்புறுத்தப்படுவதையும், காவல்துறை அவர்களை எப்படி மீட்டு குற்றத்தை தர்க்கரீதியாக முடிவுக்குக் கொண்டு வருகிறது என்பதை பற்றிய உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட படம்.' என பதிவிட்டு, இந்த படத்திற்காக வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனரையும் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த படத்திற்கு 'ஜீ ஸ்டார்' மகாலிங்கம் இசையமைத்திருக்கிறார். விஜய் சேதுபதி இந்த திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார் .