மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
நடிகர் ரஜினிகாந்த் முதன்முறையாக கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்ற பைரவி படத்தின் விளம்பரங்களில் அவருக்கு சூப்பர்ஸ்டார் என்கிற பட்டத்தை முதலில் வழங்கியவர் தயாரிப்பாளர் தாணு.. ஆனால் அப்படிப்பட்டவரே ரஜினிகாந்தை வைத்து படம் தயாரிக்க கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேல் ஆனது. அந்தவகையில் கடந்த 2016ல் ரஜினிகாந்த்தை வைத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் கபாலி என்கிற படத்தை தயாரித்தார் தாணு.
ரஜினியின் திரையுலக பயணத்தில் அது ஒரு வித்தியாசமான படம் என்றாலும் அவரது வயதுக்கேற்ற கதையும் கதாபாத்திரமும் கூடவே ரஜினியும் அதை அனுபவித்து நடித்தார் என்றாலும் பெரும்பாலான ரஜினி ரசிகர்களுக்கு அந்த படம் முழு திருப்தியை அளிக்கவில்லை. இன்னும் கொஞ்சம் மாற்றம் இருந்திருக்கலாம், குறிப்பாக கிளைமாக்ஸ் வேறு மாதிரி இருந்திருக்கலாம் என்று படம் வெளியான பின் தங்களது கருத்தை தெரிவித்தார்கள். அதேசமயம் கபாலி படம் மிகப்பெரிய வெற்றி என்றும் இதுவரை இல்லாத அளவுக்கு ரஜினி படங்களில் அதிக வசூல் என்றும் தாணு அறிவித்தார்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, ‛‛கபாலி படத்தின் கிளைமாக்ஸில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் ஆனால் இயக்குனர் பா ரஞ்சித் விருப்பப்படியே விட்டு விடுங்கள் என ரஜினிகாந்த் கூறிவிட்டதால், அதற்குமேல் அதில் தலையிட விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல எப்படி கமல்ஹாசன் நடித்து, தோல்வி படமாக அமைந்த ஆளவந்தான் படத்தை மீண்டும் தன் ரசனைக்கு ஏற்றபடி ரீ எடிட் செய்து டிஜிட்டல் முறையில் மாற்றி வெளியிடும் வேலைகளை செய்து வருகிறாரோ, அதேபோல கபாலி படத்தையும் கிளைமாக்ஸை மாற்றி படத்தையும் சற்றே ட்ரிம் செய்து மீண்டும் ரீலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் ஒரு புதிய தகவலை தெரிவித்துள்ளார் கலைப்புலி தாணு.