முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் | பேவரைட் ஆஸ்திரேலிய நடிகையுடன் புத்தாண்டை கொண்டாடிய நதியா | நான் ஹிந்தியில் படம் இயக்கினால் இவர்தான் ஹீரோ : வினோத் |

நடிகர் ஜெயம் ரவியின் அண்ணன் இயக்குனர் மோகன் ராஜா, ‛அனுமன் ஜங்ஷன்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சிரஞ்சீவியின் ‛காட் பாதர்'. விரைவில் இவர் நடிகர் நாகார்ஜூனாவின் 100வது படத்தை இயக்கவுள்ளார் கூறப்படுகிறது.
இந்நிலையில் இவரது மகன் பிரணவ் மோகன் இப்போது குழந்தை நட்சத்திரமாக சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த தமிழரசன் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் பிரபாகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் கதையே இவரின் கதாபாத்திரத்தின் மூலம் தான் நகரும். அந்த அளவிற்கு கனமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ரவி, ‛டிக் டிக் டிக்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானது போன்று இப்போது மோகன் ராஜா மகனும் இந்த படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.