ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
'இந்தியன் 2' படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் நடிக்க உள்ள படத்தை மணிரத்னம் இயக்கப் போகிறார். 'நாயகன்' படத்திற்குப் பிறகு 36 வருடங்களுக்குப் பிறகு இருவரும் இணைய உள்ளார்கள்.
'பொன்னியின் செல்வன் 2' படத்தின் வேலைகளை மணிரத்னம் அடுத்த சில தினங்களில் முடித்துக் கொள்வார். அதற்குப் பிறகு சிறு ஓய்வெடுத்துவிட்டு கமல்ஹாசன் படத்திற்கான வேலைகளை ஆரம்பிக்க உள்ளாராம்.
மே மாதத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' படத்தின் வேலைகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கடுத்து மணிரத்னம், கமல்ஹாசன் இருவரும் அவர்களது படத்திற்காக வீடியோ முன்னோட்டம் ஒன்றை முதலில் உருவாக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படத்திற்கு அப்படி வெளியிடப்பட்ட முன்னோட்ட வீடியோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே, அதை பாலோ செய்ய கமல்ஹாசன் ஆலோசனை சொன்னதாகத் தகவல்.